இன்றைக்கு கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு
செய்தால் நம் கதி அதோ கதி தான்.
நாம் ஏதேனும் அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில்
பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன
செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம்.
ADVERTISEMENT
மேலும், மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக
இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ, கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம்
கம்பியூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி
மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்;
அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம்.
ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக்
கொள்ளவும் முடியாது; ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது.
மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில்
பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமை யாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே
சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை
என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை
என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும்
வழிக்கே சென்று விடலாம்.
கம்பியூட்டரில் ஏற்படும் மானிட்டர் பிரச்சனைகளை தீர்க்க...!
முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று
பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய, கம்ப்யூட்டர் மற்றும்
மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு
பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க
வேண்டும்.
எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது.
தற்போதைய மானிட்டர் எனில் அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும்
அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப்
பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன்
செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.
Post a Comment