அப்பிள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான தனது இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 7.0.6 இனை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் அந்நிறுவனம் iOS 7.0.5 பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. எனினும் அதில் காணப்பட்ட சில பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அவற்றினை நிவர்த்தி செய்து கொண்டு இப்புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இதேவேளை அப்பிள் நிறுவனம் iOS 7.1 இயங்குதளத்தினை வடிவமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றது. இதனால் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரிய வழுக்களை இப்பதிப்பிலேயே இனி வரும் காலத்தில் நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
Post a Comment