2/27/2014

Firefox இயங்குதளத்தினைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகள் அறிமுகம்

                      

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ZTE நிறுவனம் Firefox இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது இரு புதிய கைப்பேசிகள் தொர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் பார்சிலோனாவில் ஆரம்பமான வேர்ள்ட் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ZTE Open C மற்றும் ZTE Open II ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இதில் ZTE Open II ஆனது 3.5 அங்குல அளவுடையதும், 480 x 320 Pixel Resolution உடையதுமான தொடுதிரை, 1.2 GHz Qualcomm Snapdragon 200 Dual-Core Processor, 256MB RAM, 2GB சேமிப்பு நினைவகம், 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
ZTE Open C ஆனது 4 அங்குல அளவுடையதும், 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரை, Snapdragon 200 Dual-Core Processor, 512 MB RAM, 4 GB சேமிப்பு நினைவகம், 3 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com