கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கும் முன்னணி
தளங்களுள் ஒன்றான Dropbox ஆனது சீனாவில் மீண்டும் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருட காலமாக முடக்கப்பட்டிருந்த
இத்தளமானது மீண்டும் Tech in Asia எனும் இணையத்தளத்தின் ஊடாக பாவனைக்கு
விடப்பட்டுள்ளது.
இத்தளம் தடை செய்யப்பட்ட பின்னர் 2011ம் ஆண்டு காலப்பகுதியில்
Kanbox எனும் கிளவுட் ஸ்டோரேஜ் தளம் சீனாவில் பிரபல்யமானதோடு 15 மில்லியன்
வரையான பயனர்களை கடந்த வரும் செப்டெம்பர் மாதத்தில் கொண்டிருந்தது.
தற்போது Dropbox தளத்திற்கான அனுமதியை சீன அரசு வழங்கியுள்ள நிலையில் இது பிரபல்யம் அடைய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கூகுளின் Google Drive சேவையானது தற்போதும் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment