இனி
உணவுப் பண்டங்களை தயாரிக்க ஆட்கள் தேவை இல்லை. சமையல் அறை,
பாத்திரங்கள்,அடுப்பு ஒன்றுமே தேவை இல்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் 3 டி
பிரிண்டரே செய்துவிடும்.
ஆரம்பத்தில் விண்வெளிவீரர்களுக்காக செய்யபப்ட்ட இந்த பிரிண்டர் இப்போது பூமியில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு திட்டமாக சுவை மிகுந்த பிட்சா உணவு பண்டத்தை மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கும் 3டி பிரின்டரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். VIDEO
அமெரிக்காவின், "நாசா´ விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அஞ்சன் கான்டிராக்டர் என்ற பொறியாளர், பிட்சா தயாரிக்கும் வசதியுடன் கூடிய, 3டி பிரின்டரை உருவாக்க திட்டமிட்டார்.
நாசா நிறுவனம் அளித்த, நிதியுதவியில், 3டி பிரின்டர் தயாரிப்பில், அஞ்சன் வெற்றியடைந்தார். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு, "கேனில்´ அடைக்கப்பட்ட அல்லது, "பேக்´ செய்யப்பட்ட உணவு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
ஆனால், இந்த புதிய பிரின்டர் மூலம், எளிதான, சத்தான உணவுகளையும், பிட்சாவையும் தயாரித்துக் கொள்ளலாம்.
இந்த பிரின்டரில் மா, சுவைக்கான பொருட்களுடன், புரோட்டின், கொழுப்பு மாத்திரைகளையும் சேர்த்து, 70 நொடிகளில் சுவை மிகுந்த, பிட்சாவை தயாரித்து விடலாம் என "யுடியூப்´ இணையதள பக்கத்தில் செயல்முறையுடன் அஞ்சன் விளக்கியுள்ளார்.

Post a Comment