2/11/2014

ஷூ கயிறைக் கட்டும் நேரத்தை விட அதி வேகத்தில் டேப்ளட் கணிணிகளை கையாளுகின்றனராம் கனடிய குழந்தைகள் !!

tablet kids
இளம் குழந்தைகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கனடிய ஆய்வில், இந்தக் காலத்து குழந்தைகள் ஆன்லைனில் குறைவான நேரமே செலவிடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களுக்கென மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக ஊடக பதிவு வைத்திருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக அறிக்கை கருதுகிறது.
மூன்று முதல் ஐந்து வயதான கனடிய குழந்தைகள் பைக் சவாரி செய்தல் அல்லது அவர்களின் பெயரை எப்படி எழுத வேண்டும் என்பதை விட, கணினி, கணிணி உபகரணங்கள்  பயன்பாடு மற்றும்  அதில் விளையாட்டுகள் விளையாடுவது எப்படி என்பதை தெரிந்து வைத்திருப்பதும் இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
10 நாடுகளில் 6000 க்கும் மேற்பட்ட தாய்மார்களிடம் AVG Technologies எடுத்த கருத்து கணக்கெடுப்பின்படி, மூன்று முதல் ஆறு வயது வரையிலான மற்றும் ஆறு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகள் இணைய ஈடுபாட்டில் எவ்வாறு உள்ளனர் என்று  நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பல வியக்கத்தகு முடிவுகள் கிடைத்துள்ளன.
கனடிய பெற்றோர்களில் பலர் (சுமார் 40 சதவீதம்) இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே இணையத்தைப் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் 48 சதவீதம் பேர் வாரத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் குழந்தைகளை இணையத்தில் அனுமதிப்பதாக கூறினர். இதில் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பயன்பாட்டுக்காக மின்னஞ்சல்கள் பதிவு செய்து வைத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com