2/25/2014

வெற்றிகரமாக ஆகாஷ் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது

akash missileதரையில் இருந்து விண்வெளிக்கு பாய்ந்து தாக்கும் ‘ஆகாஷ்’ ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த ஆகாஷ் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்து 18 கி.மீ. உயரத்தில் சென்று 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் வீழ்த்தும் அதிநவீன ஆற்றல் படைத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
ஒடிசாவின் பலசோர் பகுதியை அடுத்த சந்திபூர் சோதனை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஆகாஷ் ‘லக்‌ஷயா’ என்ற ஆளில்லா விமானத்தின் உதவியுடன் தொங்க விடப்பட்ட மிதக்கும் இலக்கினை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com