2/10/2014

எப்படி ஸ்மார்ட் வாட்ச்சை சார்ஜ் செய்வது?

ஃபோன், டாப்லட் என்று தொடங்கி, இப்போது எல்லாம் ஸ்மார்ட் வாட்ச்களில் வந்து நிற்கிறார்கள்.


ஆனால் ஒரு பிரச்னை இன்னும் இருக்கிறது: இவற்றை சார்ஜ் செய்வது எப்படி? இந்தத் தொழில்நுட்பத்தில்தான் இப்போது பலர் கவனம் செலுத்திவருகிறார்கள் என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் வெளியிடவிருக்கும் ஸ்மார்ட்வாட்ச்சை சார்ஜ் செய்ய மிகவும் புதுமையான நுட்பங்களை முயன்றுவருகிறதாம். உதாரணமாக, ஒரு தட்டில் இருந்தபடி காந்தப் புலனை உருவாக்கி சார்ஜ் செய்வது, சூரிய ஒளியின்மூலம் சார்ஜ் செய்வது, அணிந்திருப்பவருடைய அசைவுகளை மின் ஆற்றலாக மாற்றி சார்ஜ் செய்வது… இப்படி!

இந்த நுட்பங்களுக்கேற்ப ஸ்மார்ட்வாட்ச்சின் வடிவமைப்பும் மாற்றப்படும் என்கிறார்கள். இப்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட்வாட்ச்கள் சரியில்லாத சூழ்நிலையில், இதைமட்டும் சரியாகச் செய்துவிட்டால், பல பில்லியன்கள் குவிவது நிச்சயம்!

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com