விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிகவும் பேரார்வம் மிக்க ஒரு
திட்டம் என்று தம்மால் வர்ணிக்கப்படும் திட்டத்தை ஐரோப்பிய விண் ஆய்வு
நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
பிரன்ஞ் கியானாவில் இருந்து கயா என்னும் விண் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.இது சுற்றுவட்டப்பாதையை அடைந்தபின்னர், அங்கிருந்து எமது பால்வெளிப் நட்சத்திரக் கூட்டத்தை முப்பரிமாணத்தில் படம்பிடித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் வரைபடங்களைத் தரும்.
கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் நகர்வை அளந்து, அது அந்த வரைபடத்தை தயாரிக்கும்.
நட்சத்தரங்களில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் அவற்றின் துணைக்கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள லட்சக்கணக்கான புதிய விசயங்களையும் இது கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்தப் பால்வெளி பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானபோது இருந்த நிலைமைகள் குறித்து, காலத்தால் பின்சென்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் இந்தத் தொலைநோக்கி உதவும் என்கிறார் பெரியார் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் ஐயம்பெருமாள்
Post a Comment