சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இனி அந்த
ஒளியில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டு
பிடித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள எனர்ஜி
பிராந்டியர் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதில் சூரிய சக்தியில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை கண்டு பிடிக்கும்
சாதனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த எரிபொருளை இருப்பு வைத்து தேவையான
நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூரிய சக்தியில் எரிபொருள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதால் உலகில்
நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும் என்று விஞ்ஞானிகள்
நம்புகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment