உலகம் முழுவதும் கைபேசி பயனாளர்கள்
எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. சீனா அதிக கைபேசி
வாடிக்கையாளர்கள் பட்டியலில் முதலில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 2
வது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாடுகளும் பட்டியலில்
முதலில் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏனேனில் மக்கள் தொகையில் இந்த இரு
நாடுகள் தான் முன்னிலையில் உள்ளன.
கைபேசி வாடிக்கையாளர்கள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்:-
- ரஷ்யாவில் 154 சதவீத கைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு ரஷ்ய நபரும் (1.54) ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கைபேசியை வைத்துள்ளனர்.
- உலகம் முழுவதும் 22 சதவீதத்திற்க்கும் அதிகமான பெரியவர்களும் 47 சதவீதத்திற்க்கு மேலான இளம் வயதினரும் தங்களது கைபேசியை குளியளறையிலும் பயன்படுத்துகின்றனர்.
- இந்தியாவில் 53 சதவீதத்திற்க்கும் அதிகமானோர் தங்களது கைபேசியை தொலைத்துவிடுகின்றனர் அல்லது திருட்டு கொடுத்துவிடுகிறார்கள்.
- சீனாவில் 2.7 மில்லியன் குறுந்தகவலகள் தினமும் அனுப்பப்படுகிறது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 16-17 வயதுக்குட்ப்பட்ட 21 சதவீதத்திற்க்கும் அதிகமானோர் ஆபாச செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 51 சதவீதத்திற்க்கும் அதிகமானோர் தங்களது ஸ்மார்ட் ஃபோனை படுக்கையில் பயன்படுத்துகின்றனர்.
- சீனாவில் பயன்படுத்தும் 70 சதவீத கைபேசிகள் அவர்கள் நாட்டு தயாரிப்புகளே!
உலகம் முழுவதும் உள்ள கைபேசி பயனாளர்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் SoMobiles
வெளியிட்டுள்ளது. அவற்றில் சொல்லப்பட்டிருப்பது தான் மேற்குறிய செய்திகள்.
அந்நிறுவன ஆய்வு பற்றிய விளக்கப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment