ஏற்கனவே சிக்கலான மருத்துவ அறுவைச்
சிகிச்சைகளுக்கு வைத்தியர்களுக்கு இது உதவக் கூடியது என்பது நிரூபிக்கப்
பட்டுள்ள நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கும் இது மிகவும் உதவக் கூடியது
என்பது சமீபத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
பெட்ரிக் ஜக்சன் எனும் தீயணைப்பு வீரர்
இந்த கூகிள் கிளாஸ்ஸினை இன்னும் மேம்படுத்தி இது தீயணைப்பு பணிக்கு நன்கு
பயன்படக் கூடியது என உலகுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினாவில் ரோக்கி
மௌன்ட் எனும் பிரதேசத்தில் தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வரும் பெட்ரிக்
கணணிக் கட்டளை வல்லுனரும் (computer programmer) ஆவார். இவர் கூகிள் கிளாஸ்
தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தீச்சுவாலைகளுடன் தீயணைப்பு வீரர்கள்
போராடும் போது உதவும் விதத்தில் ஒரு கிளாஸ்வேரினை (Glassware)
உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த Glassware மூலம் மறைமுகமாகத்
தீச்சுவாலைகள் உள்ள இடங்கள், எலெக்ட்ரிக் குழாய்கள் பற்றி எச்சரிக்கவும்
கட்டட அமைப்புக்கள் குறித்த விவரணப் படங்களைக் குறித்த இடத்தில்
பெறுவதற்கும் முடியும் என்பதுடன் இதற்கான கட்டளைகளைக் கையால் இயக்காமல்
ஒலிக் கட்டளைகள் மூலம் இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment