பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வருத்தமான செய்திகளை பகிரும்போது லைக் பட்டனுக்கு பதிலாக “இரங்கல்” பட்டன் விரைவில் வரவிருக்கிறது.
பொதுவாக பேஸ்புக்கில் நாம் எதையாவது பகிர்ந்தால் அதை படிப்பவர்கள்
விரும்பினால் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் பொருட்டு லைக் பட்டன்
இருக்கிறது. அதுவே நாம் வருத்தமான செய்திகளை பகிர்ந்தாலும் “நானும்
வருத்தப்படுகிறேன்” என்பதை சொல்வதற்கு எந்த பட்டனும் இல்லை. மாறாக அதே லைக்
பட்டனை தான் பயன்படுத்த முடியும்.
இதனால் நண்பர்களின் வருத்தத்தை விரும்புவதாக அர்த்தம் வந்துவிடுகிறது.
இந்த குறையை நீக்குவதற்காக பேஸ்புக் பொறியாளர் ஒருவர் “இரங்கல்” பட்டனை வடிவமைத்துள்ளார்.
பேஸ்புக்கில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் “Feeling” வசதியில் வருத்தமான
உணர்ச்சியை தேர்ந்தெடுத்து பகிர்ந்தால் எப்போதும் காட்டும் லைக்
பட்டனுக்கு பதிலாக இரங்கல் பட்டனைக் காட்டும்.
இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment