திருமணத்துக்காக காசு, மிருகங்கள் என கலாசாரத்துடன் சம்மந்தப்பட்ட
விடயங்களை சீதமானக் கேட்பதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் யேமன் நாட்டைச்
சேர்ந்த
தந்தையொருவர் புதுமையாக தனது மகளை திருமணம் செய்வதற்கு ஒரு மில்லியன் 'பேஸ்புக் லைக்'குகளை சீதமாகக் கேட்கின்றார்.
யேமன் நாட்டின் மேற்கு பிரதேச டைஸ் மாகாணத்திலுள்ளவர்களிடையே
பேஸ்புக்கில் மிகவும் பிரபல்யமானவர் ஸலீம் ஆயிஷா. இவரின் தந்தையே
இப்புதுமையான சீதனத்தை கோரியுள்ளார்.
முஸ்லிம்களின் வழக்கப்படி மணப்பெண்ணுக்கு மணமகன் சீதனம் (மஹர்) வழங்க வேண்டும். இது பெண்ணைப் பொறுத்து மாறுபடும்.
இம்முறை யேமனிலும் நடைமுறையிலுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில்
யேமனிலுள்ள ஆண்களுக்கு பணத்தினை சீதனமா வழங்க முடியாதுள்ளது. இதனாலேயே ஒரு
மில்லியன் 'பேஸ்புக் லைக்'குகளை சீதமாக கேட்டுள்ளாராம் ஆயிஷாவின் தந்தை
ஸலீம்.
இது குறித்து ஆயிஷா கூறுகையில், 'அதிகளவான சீதனக் கோரிக்கைகளை
மாற்றியமைக்கு முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில்
அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன.
எனது தந்தை அவரது வருங்கால மருகன் இலக்கொன்றினை நிர்ணயித்து அதனை
அடையக்கூடியவராக உள்ளார் என்பதனை பார்ப்பதையே முக்கியமாகக்கொண்டுள்ளார்
எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கினை அடைய கடுமையான முயற்சி எடுப்பவருக்கு எனது மகளை திருமணம்
முடித்து வைக்கவும் நான் விருப்பப்படுவேன் என தந்தை ஸலீம்
குறிப்பிட்டுள்ளார்-
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment