1/28/2014

3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி சந்திரனில் வீடமைக்கும் முயற்சியில் நாசா

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவானது முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்திரனில் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது குறித்து அறிவிப்புச் செய்துள்ளது.


சந்திரனில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான கட்டமைப்பை நிர்மாணிப்பதே நாசாவின் முக்கிய இலக்காக உள்ளது.


முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களை கணிணி மூலம் இயக்கப்படும் ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பில் 24 மணி நேரத்தில் வீடுகளை நிர்மாணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.


இந்நிலையில் மேற்படி முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதற்கு அமெரிக்கா தென் கலிபோனியா பல்கலைக்கழகத்திற்கு நாசா தற்போது நிதியுதவி அளித்துள்ளது.


அமைப்புக் கைவினைத்திறன் என அழைக்கப்படும் இந்த செயற்கிரமம் சந்திரனின் மேற்பரப்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பில் கொங்கிறீட் அல்லது ஏனைய மூலப் பொருட்களை பயன்படுத்தி வீடுகளை அமைப்பதே நோக்காகக் கொண்டது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சில பாகங்கள் பூமியில் உருவாக்கப்பட்டு ஏவுகணையொன்றின் மூலம் சந்திரனுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எனினும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான 90 சதவீத மூலப்பொருட்கள் ஏற்கனவே சந்திரனில் உள்ளதாக கூறப்படுகின்றது.

மேற்படி புதிய வீடமைப்பு முறைமையைப் பயன்படுத்தி அனர்த்த வலயங்களிலும் சேரிப்பகுதிகளிலும் இலகுவாக வீடுகளை நிர்மாணிக்க முடியும் என தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஹ்ரோன் கொஷ்ருனவிஸ் தெரிவித்தார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com