சான் பிரான்சிஸ்கோவவைச் சேர்ந்த படேன் என்ற
மாணவன் ஒருவரே இந்த கறைபடியா
ரீ ஷேட்டினை உருவாக்கியுள்ளார்.
பொலித்தின் வகை துணியினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரீ ஷேர்ட் 'சிலிக்கா ஷேர்ட்' என அழைக்கப்படுகிறது. முதலில் கறையை போக்கும் இராசயன தெளிப்பானை உருவாக்கியுள்ளார் படேல்.
பின்னர் தெளிப்பானை விட சிறப்பாக அமையும் என எதிர்பார்த்து கறைபடியாத வகையிலமைந்த துணியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு நனோ தொழில்நுட்பத்தின் மூலம் தோலுக்கு எரிச்சலை ஏற்படுத்தாததும் திரவத்தை உறுஞ்சாததுமான சிலிக்கா துணியினை உருவாக்கியுள்ளார் படேல்.
'மிக நுண்ணிய படைகளாகளின் தொகுப்பாக அமைந்துள்ள சிலிக்கா துணியானது திரவத்துக்கும் துணிக்கும் இடைப்பட்டதொரு நிலையில் அமைந்துள்ளது. இதனால் பெரும்பாலான திரவ மூலக்கூறுகளால் துணியை தொட முடியாது' என படேல் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
சாதாரண துணிகளுக்கும் சிலிக்கா துணிக்குமிடையில் வித்தியாமில்லையாம். தக்காளி சோர்ஸ், கொக்கா
கோலா, பியர், ரெட் வைனினால்
கூட இத்துணி கறைபடியாது. இதனை
வெற்றிகரமாக சோதனை செய்த படேல்
இது குறித்து தகவல்களை உள்ளடக்கி கிக்ஸ்டார்ட் எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளார்.
துணியை மென்மையாக்கும் வகையில் இயந்திரத்தில் துவைத்தல், பிளீச்சிங், வர்ண ஆடைகளுடன் துவைத்தல், அயர்ன் செய்தல போன்றவற்றிலிருந்து தவிர்ப்பதன் மூலமே கறைபடியாத ரீ ஷேர்ட் முழுமையான பயன்தரும் என கிக்ஸ்டார்ட் இணையத்தில் சிலிக்கா ரீஷேர்ட் பயன்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்கள் செலவு செய்து கண்டுபிடித்துள்ள சிலிக்கா ரீஷேர்ட்டை 2 வருடங்கள் பாவிக்க முடியும் என்கிறார் படேல்.
அடுத்த வருடம் மே மாதம் முதல் சுமார் 30 டொலர்களுக்கு இந்த ரீ ஷேர்ட் இணையத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Post a Comment