12/26/2013

துண்டான மணிக்கட்டை காலில் வளர்த்து மீண்டும் கையில் பொருத்தினர்...!

Photo: துண்டான மணிக்கட்டை காலில் வளர்த்து மீண்டும் கையில் பொருத்தினர்...!

தொழிற்சாலை விபத்தில் துண்டான வாலிபரின் கையை காலில் ஒட்டி வளர்த்து, மீண்டும் கையில் பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர். சீனாவில் ஹுனன் மாகாணத்தில் உள்ள ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 10ம் தேதி தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி அவருடைய வலது கையில் மணிக்கட்டு வரை துண்டானது. அவரை மீட்ட சக தொழிலாளர்கள், துண்டான கையுடன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருடைய நிலையை கண்ட டாக்டர்கள், துண்டான மணிக்கட்டை நேரடியாக கையில் பொருத்த முடியாது என்பதால், அவரது இடது காலில் கணுக்கால் அருகே அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்தனர். அவர்களின் திட்டப்படி, இணைக்கப்பட்ட அந்த கையில் செல்கள் உயிர் பெற்றன. மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி, வலது கையில் பொருத்தினர். ஆபரேஷன் வெற்றி பெற்று, வெய்யின் வலது கரம் வழக்கம்போல் நன்றாக செயல்பட தொடங்கியுள்ளது. இது மருத்துவ அதிசயம்’’ என்று பிரிட்டன் டாக்டர்கள் வியந்து பாராட்டி உள்ளனர்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com