12/27/2013

அண்டத்தில் நட்சத்திரத்தை சுற்றிவரும் ஒரு புதிய ஊதா நிறக்கோள் கண்டுபிடிப்பு!

Glass-rain-may-give-planet-blue
அண்டத்தில் உள்ள வேறொரு நட்சத்திரத்தை ஊதா நிறத்திலான கோள் ஒன்று சுற்றிவருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எச்.டி.189733பி என்ற அந்த கோள் ஊதா நிறத்தில் இருப்பது, அதன் வளிமண்டலத்தில் சிலிகேட் (கண்ணாடி) மழை பொழிவதால் அவ்வாறு ஊதா நிறத்தை பிரதிபலிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து ஹப்புள் ஸ்பேஸ் டெலெஸ்கோப்பில் பதிவான போட்டோக்கள் தெளிவு படுத்துவதாக உள்ளது. மிக தூரத்தில் பூமியை போன்று தெரியும் இந்த கோளானது, மிகப்பெரிய வாயுவுக்கிரகமாக இருக்கலாம் என்றும்
கூறப்படுகிறது.
1000 டிகிரி செல்சியசுக்கு சுட்டெரிக்கும் அந்த ஊதா நிறக்கோளில், சிலிகேட் (கண்ணாடி) மழை பெய்கிறபோது சுமார் 7000 கிலோ மீட்டர் வேகத்தில் வாயு காற்றும் அங்கு வீசுவதாக கூறப்படுகிறது.
இதன் வளிமண்டலத்தில் மிகப்பெரும் வெடிப்புகளுடன் உறைதல் மற்றும் மூட்டத்தாலும் தனது உருவை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதாகவும் அது கூறப்படுகிறது.
நம்மிடமிருந்து 63 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு அப்பால் உள்ள இந்த கொந்தளிப்பான அன்னிய உலகம் நமது பூமியிலிருந்து அருகில் உள்ள ஒரு கோளாகவே பார்க்கப்படுகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com