12/01/2013

பூமியின் காந்த மண்டலத்தை கணிக்க 3 செயற்கைக் கோள்கள்

பூமியின் காந்த மண்டலத்தை மேலும் தெளிவாக அடையாளப் படுத்துவதற்கான நோக்குடன் மூன்று ஐரோப்பிய (சாட்டலைட்) செயற்கைக் கோள்கள் ரஷ்யாவிலிருந்து இன்று ஏவப்படுகின்றன.
பூமியின் ஆழத்தில், குழம்பு நிலையில் இருக்கும் புவி மையப் பகுதியில் காந்த மண்டலம் எவ்வாறு இயங்குகின்றது என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இந்த செயற்கைக் கோள்கள் உதவும்.
மூன்று செயற்கைக் கோள்களும் பொதுவாக 'ஸ்வார்ம்' (SWARM) என்று அழைக்கப்படுகின்றன.
அண்மைய பல ஆண்டுகளாக பூமியின் காந்த மண்டலம் பலவீனமடைந்து வருகின்றமைக்கான காரணங்களை ஆராய்வதற்கும் விஞ்ஞாளிகள் இந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்தவுள்ளனர்.
பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை தமது துருவத் தன்மைகளை பரிமாற்றிக்கொள்ளும் இயல்பு கொண்டவை.
அப்படியான ஒரு துருவ தன்மை பரிமாற்றம் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்றதா என்றும் விஞ்ஞானிகள் ஆராயவுள்ளனர்.
இந்த காந்த மண்டலம் இல்லாவிட்டால் பூமி வறண்டு செவ்வாய்க் கிரகத்தைப் போல உறைந்து விடும்.
சூரியனிலிருந்து விலகிச் சென்றுவிடாது பூமியை இயங்கச் செய்வதற்கு இந்த காந்த மண்டலம் தான் காரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com