இன்று மொபைல் உலகில் ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஒரே ஜாம்பவான் ஆண்ட்ராய்டு மட்டும் தான் இதுவரை அந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்பெறவில்லை தனக்கென ஒரு நிரந்திர இடத்தையும் பிடித்துள்ளது ஆண்ட்ராய்டு.
வருகின்ற நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஆறு ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது.
லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஒட்டுமொத்த மொபைல் உலகையும் தன் கைக்குள் வைத்துள்ளது இது.
இந்த ஆண்ட்ராய்டு எப்படி வளர்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா இதோ
அதன் முழு கதையையும் இங்கு பாருங்கள்....
ஆண்ட்ராய்ட் முதல் வெர்ஷன்
அமெரிக்க
நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில்
இயங்கியது. இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட்
சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள்.
சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை.
செப்டம்பர் 2008ல் இது வெளியானது.
கப் கேக்ஸ் அவே
நல்ல
விருந்திற்குப் பின்னர் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக்
கூட்டை டெசர்ட் (Dessert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட்
சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு
வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல்
வெளியானது.
Post a Comment