11/04/2013

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

மின் உபயோகத்தைக் குறைக்க
இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.
• மோட்டாரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.
• காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.
• தானாக “டீஃப்ராஸ்ட்” ஆகாத ஃபிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி “டீஃப்ராஸ்ட்” செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும்.
• கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன்படுத்தினால் மின்சாரம் மிச்சமாகும்.
• கணனியை ஸ்டார்ட் செய்ய, Shut down செய்ய சோம்பற்பட்டு ஸ்க்ரீன் சேவரில் போட்டு வைப்பதால் மின்சாரம் பெரிய அளவில் விரயமாகும்.
• ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி ஃபில்டரை மாதாமாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.
• ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும்.
• நீண்ட நாட்களுக்கு வெளியூருக்குச் சென்றால் ஃபிரிட்ஜை அணைத்துவிடுவதன்மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
• பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும். ஏனென்றால் வெளிச்சம் போதவில்லை என்று அதிக பல்புகள் மாட்ட வேண்டியிருக்காது.
• பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, தொலைக்காட்சி, கணனி என்று அனைத்தையும் அணைத்தபின்பே அறையைவிட்டு வெளியேறுங்கள்.
• கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என்று திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com