11/02/2013

வந்துருச்சு யுஎஸ்பியைக் காக்கும் 'காண்டம்'.. இனி தகவல் திருடர்களுக்கு 'கண்டம்'தான்!

                      
டெல்லி: யுஎஸ்பி கருவிகளை பயன்படுத்துவதில் இப்போதெல்லாம் நிறைய சவால்கள், சிக்கல்கள். ஆனால் இந்த குழப்பங்களிலிருந்து நமது கம்ப்யூட்டர்களையும், அதில் உள்ள முக்கியத் தகவல்களையும் பாதுகாக்க ஒரு புது உபாயம் பிறந்துள்ளது. அதுதான் யுஎஸ்பி காண்டம்.. பெயருக்கேற்ப இதுவும் காண்டம் போலத்தான் இருக்குமாம். அதாவது யுஎஸ்பி கருவி மீது இந்த பாதுகாப்பு கவசத்தைப் பொருத்திக் கொண்டு உங்களது யுஎஸ்பி கேபிளை பயன்படுத்தும் இடத்தில் செருகி வேலையை தொடரலாம். இந்த பாதுகாப்பு கவசத்தைத் தாண்டி எந்த தகவல் திருட்டிலும் விஷமிகள் ஈடுபட முடியாதாம்.
யுஎஸ்பி கேபிள்கள் மூலம் இப்போது தகவல் திருட்டு பரவலாகி வருகிறது. 
குறிப்பாக நமக்கு அறிமுகம் இல்லாத கம்ப்யூட்டர்களில் யுஎஸ்பி கேபிள்களை செருகும்போது கவனமாக இருக்க வேண்டியுள்ளது. காரணம், தகவல் திருடும் பின்களை அதில் விஷமிகள் செருகியிருக்கலாம்.
மிகச் சிறிய சாதனமாக இந்த பின்கள் இருக்கும். இதில் நமது யுஎஸ்பியை செருகும்போது அதன் வழியாக அத்தனை தகவல்களையும் திருடி விடுகிறார்கள்.
ஆனால் இதற்கு ஒரு நிவாரணம் தேடியுள்ளது Int3.cc என்ற ஒரு அமைப்பு. இவர்கள் யுஎஸ்பி கேபிள் மீது பொருத்தப்படும் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு செல்லமாக யுஎஸ்பி காண்டம் என்றும் பெயரிட்டுள்ளனர்.
                 
இந்த கவசத்தை யுஎஸ்பி கேபிள் மீது மாட்டிக் கொண்டு பின்னர் அதை பின்னில் செருக வேண்டும். அதன் பிறகு அந்த யுஎஸ்பி வழியாக எந்த தகவலையும் திருட முடியாதாதம்.
இந்த யுஎஸ்பி காண்டம் எப்படி இருக்கும் என்ற படத்தை அவர்கள் வெளியிடவில்லை. மாறாக சர்க்யூட் படத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு கவசத்தை டைப் ஏ, மினி பி, மைக்ரோ பி போர்ட் யுஎஸ்.பிக்களுக்குப் பொருத்தலாம்.
இதன் விலை உள்ளிட்ட விவரங்களையும் இந்த அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. ஆனால் குறைந்த விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வாலிப, வயோதிக அன்பர்களே...இனிமேல் மெடிக்கல் ஷாப்பில் அந்தக் கவசத்தை வாங்கும்போது பக்கத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் கடைக்குப் போய் இந்தக் கவசத்தையும் வாங்க மறவாதீர்..

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com